சத்திய வேதம் — தமிழ் பைபிள் ஆன்லைனில்

TheTamilBible.com என்பது முழு பரிசுத்த வேதாகமத்தையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக வாசிக்கும் ஒரு தளம். தமிழில் பாரம்பரியமான பழைய மொழிபெயர்ப்பு (Old Version) வேதாகமமும், ஆங்கிலத்தில் கிங் ஜேம்ஸ் (KJV) வேதாகமமும் இங்கே உள்ளன. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு சேர்த்து மொத்தம் 66 புத்தகங்கள், 1,189 அதிகாரங்கள், 31,102 வசனங்கள் — அனைத்தும் முழுமையாக.

ஒவ்வொரு வசனத்தையும் தொட்டு அதனுடன் தொடர்புடைய இணை வசனங்களை (cross-references) உடனே காணலாம் — 3,43,000-க்கும் மேற்பட்ட இணைப்புகள், முழுத் தமிழ் உரையுடன். கடினமான தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு தொடுதலில் பொருள், 66 புத்தகங்களுக்கும் அறிமுகம், சங்கீதத் தலைப்புகள், புணர்ச்சி (சந்தி) அறிந்த தமிழ்த் தேடல் ஆகியவை உள்ளன.

இந்தத் தளம் முற்றிலும் இலவசம் — சந்தா இல்லை, பதிவு இல்லை, விளம்பரம் இல்லை. வேதாகமம் முழுவதையும் ஒரே முறை பதிவிறக்கி, இணையம் இல்லாமலும் ஆஃப்லைனில் வாசிக்கலாம்; உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கணினியில் செயலியாக நிறுவிக்கொள்ளவும் முடியும்.

தினசரி வேத வாசிப்புக்கும், ஆழமான வேத ஆராய்ச்சிக்கும், பிரசங்கம் தயாரிக்கும் போதகர்களுக்கும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கவனச்சிதறல் இல்லாத தெளிவான வாசிப்புத் திரை, ஐந்து தமிழ் எழுத்துருக்கள், இரவு (Dark) மற்றும் Sepia முறைகள், வசனங்களைத் தேர்ந்தெடுத்துப் பிரதி எடுக்கும் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிரும் வசதி, ஓராண்டு மெக்கெய்ன் (M'Cheyne) வேத வாசிப்புத் திட்டம் ஆகியவை உள்ளன. நீங்கள் வாசித்து நிறுத்திய இடத்திலிருந்தே மீண்டும் தொடரலாம்.

Tamil Bible

Tamil Bible

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்

📖
English
KJV
📖
Tamil
தமிழ்
Copied!